எம்.ஜி. ராமச்சந்திரன் அவர்கள் ஜப்பான் நாட்டுக்கு சில காரணங்களுக்காக சிகிச்சை மேற்கொள்ள சென்றிருந்தார். அப்போது அவருக்கு சிகிச்சை செய்த டாக்டர்கள், எம்.ஜி.ஆர். அவர்களுக்கு காந்த சிகிச்சை (magnetic theraphy) கொடுக்க இருந்ததால் தாடையை எக்ஸ்ரே எடுத்து பார்த்த, போது நடிகர் எம்.ஆர்.ராதா சுட்ட குண்டின் சிதறிய சில பாகங்கள் உள்ளே பதிந்து இருந்தது. குண்டு சிதறல்கள் இரும்பு உலோகம் தானா என்ற சந்தேகம் ஏற்பட்டது. காந்த சிகிச்சை கொடுக்கும் போது அவை எசகுபிசகாக இடம் பெயர்ந்து உயிருக்கு ஆபத்து விளைவிக்க கூடும் என்று அஞ்சினர். தமிழகத்தில் இருந்த டாக்டர் சந்திரசேகரன் அவர்களுக்கு போன் செய்து "குண்டு சிதறல்களில் இரும்பு உலோகம் இல்லை" என்று தெளிவு படுத்திக்கொண்ட பிறகு தான் மேற்கொண்டு சிகிச்சை கொடுத்தனர்.